ஈழத் தமிழ் உணவு மரபுரிமை | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Update: 2022-07-28
Description
கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும் மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை. சில வேளைகளில் அவ்வகைப்பட்ட அதிகாரபூர்வமான உள்ளூர் உணவுச்சாலை என சில உணவுச்சாலைகள் தம்மை விளம்பரம்பரஞ் செய்தாலும் கூட உண்மையில் அவை பெரும்பாலும் வர்த்தக வெற்றிக்கான வெறுங்குறியீடுகள் மட்டுந்தான்.
Comments
In Channel





